01.04.2021 அன்று சாவடைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராஜப்பு யோசப் ஆண்டைகை அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று 11.04.2021 ஞாயிற்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் பிரான்சு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வன் நிந்துலன் அவர்களும், ஈகைச் சுடரினை 2 ஆம் லெப்டினன் ஆதவன் அவர்களின் சகோதரர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தை தொடர்ந்து அனைவரும் சுடர்வணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தினர்.
இராஜப்பு யோசப்பு ஆண்டகை அவர்களின் இழப்பு குறித்து அனைத்துலகத் தொடர்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து வணக்கத்துக்குரிய இராஜப்பு ஆண்டகை அவர்களைப்பற்றி பரப்புரைப் பொறுப்பாளர் உரையாற்றினார். அவர் தனது உரையில் 2009 பேரவலத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் ஆண்டகை அவர்கள் எமது மக்களின் அவலங்களை வெளிக்கொண்டுவருவதிலும், பேரவலத்தின் பின்னர் போரின் சாட்சியக இருந்ததுடன். அது குறித்து சர்வதேசத்திற்கு சாட்சியம் வழங்கி இருந்தார் என்றும், எமது மக்களிற்கான மனிதாபிமனப் பணியினை தனது ஓய்வு நிலையிலும் மேற் கொண்டார் என்றும். இந்த சூழ்நிலையில் அவரது இழப்பு பேரிழப்பு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து நிர்வாகப் பொறுப்பாளர் திரு பாலசுந்தரம் அவரது உரையில் கலாநிதி இராஜப்பு ஆண்டகை எமது மக்களுக்கு மேற்கொண்ட மனிதாபிமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி என்றும் தெரிவித்தார்.
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் கொட்டொலி உடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் இராஜப்பு ஆண்டகையின் வணக்க நிகழ்வு!