ரைட் சகோதரர்களின் சரித்திர
சாதனையை ஒத்த ஒரு நிகழ்வு!
வேற்றுக்கிரகம் ஒன்றில் மனிதனது முதலாவது வான்பறப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருக் கிறது.அறிவியலால் சாதிக்கப்படுகின்ற அந்த உணர்வு பூர்வமான காட்சியைக் காண்பதற்காக முழு உலகமுமே காத்தி ருக்கிறது.
120 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ரைட் சகோதரர்கள்(Wilbur and Orville Wright) நிகழ்த்திய முதலாவது பறப்பு முயற்சிக்கு நிகரான ஒரு பெரும் அறிவியல் பாய்ச்சலாகப் பதிவாகப் போகின்ற சரித்திர நிகழ்வு அது.
மர்மங்கள் நிறைந்ததும் மனிதனது அடுத்த குடியேற்றம் (Martian colony) என்றும் நம்பப்படுகின்ற செவ்வாய்க் கோள், நாளாந்தம் வருகின்ற செய்திகள் ஊடாக மனிதனுக்கு மிகவும் நெருக்க மான அடுத்த வீடுபோல மாறி வருகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா – பிரான்ஸ் நாடுகளின் அறிவியலாளர் களது முயற்சியால் நாசா அனுப்பிய Perseverance விண்கலம் சிவப்புக் கிரகத்தின் பல முகங்களை உலகிற்கு அம்பலமாக்கி வருகிறது.படங்களாக, ஒலிப்பதிவுகளாக நாளாந்தம் தகவல்களை அது பூமிக்கு அனுப்பிக்
கொண்டிருக்கிறது.
ஏழு மாதங்கள் 292 மில்லியன் மைல்கள்
தூரம் பயணம் செய்த ரோபோ விண் கலம் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி
செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி யது.அதில் பொருத்தப்பட்டிருக்கின்ற அதி நவீன கமெராக்கள் அபூர்வமான பல காட்சிகளை அனுப்பி வருகின்றன. செவ்வாயில் தினசரி என்ன நடக்கிறது என்பதைக் கூட பூமியில் இருந்தவாறு அவதானிக்க முடிகின்றது.அங்கு பல அரிய செயல்களைப் புரிந்து வருகின்ற Perseverance ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்ட சிறிய புத்திக் கூர்மை கொண்ட மினி ஹெலிக்கொப்ரரின் பெயர்தான் Ingenuity.
இரண்டு கிலோவுக்கு குறைந்த எடை.
ஆனால் அதன் நூண்ணறிவோ மிகை.
செவ்வாயின் அடர்த்தி குறைந்த வளி மண்டலத்தில் பறக்கப்போகின்ற முத
லாவது விமானம் அது. இதுவரை நாளும்
தாய்க் கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த
ஹெலி பரீட்சார்த்தப் பறப்பு முயற்சியில்
ஈடுபடுவதற்காக கடந்த 4ஆம் திகதி முதல் Perseverance விண்கலத்தை விட்டு விலகி செவ்வாயின் தரையில் தனியே கால்பதித்து நிற்கின்றது.
அது தனது இயக்கத்துக்கான சக்தியை இதுவரை ரோவர் கலத்தின் அணு மின் பற்றரிகளில் (nuclear-powered system) இருந்து பெற்றுவந்தது. இனிமேல் தனது சூரிய மின்கலம் மூலம் சேமிக்கப்படு கின்ற சக்தியில் (solar- power) தனித்து இயங்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயில் நிலவும் கடும் குளிர் காரணமாக ஹெலியின் பறப்பு முயற்சி ஏப்ரல் 8ஆம் திகதியில் இருந்து 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக நாசாவின் ஹெலிக்கொப்ரர் திட்டத்தின் தலைமைப் பொறியியலாளர் பொப் பலராம் (Bob Balaram) தெரிவித்திருக்கி றார்.காலநிலையும் தொழில் நுட்ப செய
ற்பாடுகளும் சரிவர அமைந்தால்
ஞாயிற்றுக்கிழமை ஹெலி பறப்பது
நிச்சயம்.
பூமியைப் போலன்றி செவ்வாயில் இரவு
நேரத்தில் கடும் குளிர் மைனஸ் -130 F
வரை குறைகிறது. Ingenuity ஹெலி அதன் சக்தி மூலம் முதலில் தன்னைத் தானே கடும் குளிரில் இருந்து காத்துக்
கொள்ளவேண்டும். அதற்கான வெப்பமூ
ட்டும் செயற்பாடுகள் சரிவர இயங்குகின்
றனவா என்பது தற்சமயம் பரிசோதிக்கப்
பட்டுவருகின்றது.அதன் கருவிகளும்
வெப்ப அளவீடுகளும் சரிபார்க்கப்பட்ட
பின் பரீட்சார்த்தப் பறப்பு தொடங்கும்.
கடும் குளிர் மிகுந்த இரவுகளை ஹெலி
தனித்து வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
அதுவே அதன் முதலாவது வெற்றி என்று நாசாவின் செவ்வாய்ப் பறப்புத் திட்டக் குழு தெரிவித்துள்ளது.
செவ்வாயில் ஜெஸீரோ கிரேட்டர் (Jezero Crater) எனப்படுகின்ற ஆற்றுப் பள்ளத் தாக்கு போன்ற பகுதியில் ஹெலி தனது முதல் பறப்பை மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப் பாதையின் வரைபடத்தை நாசா வெளியிட்டுள்ளது. சுமார் 30 செக்கன்கள் மட்டுமே நீடிக்க உள்ள பரீட்சார்த்தப் பறப்பின் போது ஹெலி சுமார் மூன்று மீற்றர்கள் உயரத்தில் பறக்கும். அதன் பிறகு அடுத்த முப்பது நாட்கள் அதன் பறப்பு உயரமும் தூரமும் அதிகரிக்கப் படும்.
பூமியைப் போலன்றி செவ்வாயின் வான் மண்டலம் காற்று அடர்த்தி குறைந்தது.
எனவே அங்கு பறப்பில் ஈடுபடுகின்ற
ஹெலியின் இரட்டைத் தகடு (twin blades) விசிறிகள் நிமிடத்துக்கு இரண்டாயிரத்து
400 தடவை (2,400 rotation) சுழலும் வேகம் கொண்டவை.
முழு உலகமும் ஆவலுடன் காத்திருக்கி ன்ற Ingenuity ஹெலியின் முதலாவது பறப்பை Perseverance விண்கலம் படம்
எடுத்து மறுநாள் பூமிக்கு அனுப்பிவைக்க
வுள்ளது. ஹெலி பறக்கும் காட்சியை
நேரலையில் காண்பதற்கான வசதிக ளுடன் உலகெங்கும் அறிவியலாளர்கள் காத்திருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதர்கள் மேற்
கொள்ள ஆசைப்படுகின்ற எதிர்காலப் பயணங்களுக்கெல்லாம் ஒரு தொடக் கமாக இந்த நாட்கள் வரலாற்றில் எழுதப்
படவுள்ளன.
1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் (Wright Brothers) என அறியப்பட்ட அமெரிக்க இரட்டையர்கள் வடக்கு கரோலினாவில் மேற்கொண்ட முதலா வது விமானப் பறப்பு முயற்சியே இன் றைக்கு உலகில் பறக்கின்ற எல்லா வானூர்திகளுக்குமான ஆரம்பமாக அமைந்தது. பூமியில் புரியப்பட்ட அந்த அறிவியல் சாதனையை நூற்றாண்டு களுக்குப் பிறகு மனிதன் பூமிக்கு வெளியே வேற்றுக் கிரகம் ஒன்றில் முதல்முதலாகச் சோதித்துப் பார்க்கின்ற நிகழ்வுதான் செவ்வாய்ப் பறப்பு.
ரைட் சகோதரர்கள் கரோலினாவில் தங்களது பறப்பு முயற்சிக்குப் பயன்படுத் திய முதலாவது விமானத்தின் உடற்பாக ங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய முத் திரை அளவான ஒரு துண்டு (small piece) செவ்வாயில் தரையிறங்கி உள்ள புத்திக் கூர்மைக் ஹெலிக்கொப்ரரில் பொருத் தப்பட்டுள்ளது.
ரைட் சகோதரர்கள் தங்களது பறப்பு முயற்சிகளுக்குப் பயன்படுத்திய விமா னங்களைக் காட்சிப்படுத்தி பேணி வரு கின்ற ஓஹியோவில் உள்ள அருங்காட் சியகம் ஒன்று ‘Flyer 1’ எனப்படுகின்ற முதலாவது விமானத்தின் சிறிய பகுதி ஒன்றை ரைட் சகோதரர்களது குடும்ப வாரிசுகளினது சம்மதத்துடன் தங்களு க்கு வழங்கியது என்ற புதிய தகவலை நாசா வெளியிட்டிருக்கிறது.
மனித குலத்தின் இரண்டு பெரும் பறப்பு முயற்சிகளிடையிலான வரலாறு இதன் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.
*படங்கள் :ரைட் சகோதரர்களது முதல் விமானம் (1903)’நாசாவின் Ingenuity ஹெலி(2021).
குமாரதாஸன். பாரிஸ்.
10-04-2021