பிரான்ஸில் கடந்த வருடத்தில் சைக்கிள் விற்பனை அமோகம்!

0
349

சூழலுக்கு நன்மை, உடலுக்குப் பயிற்சி, சுகாதார இடைவெளி, செலவு மிச்சம்
விபத்து இல்லை இப்படிப் பலவித நன் மைகளைத் தருவது சைக்கிள் ஓட்டம். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய சாதகமான விளைவுகளில் ஒன்று சைக்கிள் பாவனை அதிகரிப்பு.

பிரான்ஸில் கடந்த ஆண்டு சைக்கிள் விற்
பனை உச்ச அளவைத் தொட்டது என்று
வணிகத் தரவுகள் வெளியாகி உள்ளன.
சைக்கிள் சந்தை முன்னைய ஆண்டு களை விட 25 வீதத்தால் உயர்ந்து மூன்று பில்லியன் ஈரோக்களை வருமானமாக
ஈட்டி உள்ளது என்று “Cycle Observatory”
என்ற வணிக மதிப்பீட்டு நிறுவனம் தெரி
வித்துள்ளது.

பாரிஸ் உட்பட முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு வசந்த காலப்பகுதியில்
சைக்கிள் ஓட்டத்துக்காக தனியான பா
தைகள் ஒதுக்கப்பட்டமை சைக்கிள் சவாரியாளர்களுக்கு பெரும் ஊக்கமாக
அமைந்தது.நெருக்கமாக வாகனங்களில் பயணிப்பதை விடவும் சைக்கிள்களில்
தனியே செல்வது சுகாதாரத்துக்குப் பாது
காப்பானது என்ற உணர்வு பலரையும்
புதிதாக சைக்கிள்களை வாங்கத் தூண் டியது என்று மதிப்பீட்டு அறிக்கைகள்
கூறுகின்றன.

சைக்கிள்களின் பாவனையும் விற்பனை யும் உயர்ந்திருப்பது அவற்றின் உதிரிப் பாகங்களுக்கான தேவைகளையும் பெரு
க்கிவிட்டுள்ளது. ஜப்பான், சீனா, தைவான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்தே சைக்கிள் உதிரிப்பாகங்கள்
ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி ஆகின்றன.
தொற்று நோய்க் காலம் ஏற்றுமதிகளில் தடை ஏற்பட்டுள்ளதால் சைக்கிள் உதிரிப்பாகங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
10-04-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here