தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன ஹட்டன், தலவாக்கலையில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தின.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், உப தலைவர் முத்துசிவலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஹட்டனில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.00 மணிவரை மல்லியப்பு சந்தியில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தை நடத்தினர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவர் வீ. இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் தலவாக்கலை நகர சபை மைதானத்திலும் சத்தியாக்கிரகத்தை நடத்தினர்.
காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை இந்த சத்தியாக்கிரகம் நடைபெற்றது. இதேவேளை, தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்யும் போராட்டம் காரணமாக தோட்ட கம்பனிகள் நட்டமடைவதை கருத்திற் கொண்டு 23 தொழிற்சாலைகளை தற்காலிகமாக இழுத்து மூடுவதற்கு தோட்ட கம்பனிகள் முடிவு செய்துள்ளன.
தலவாக்கலையில் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகிய இருவரும் இம்முறை சம்பள உயர்வில் ஆயிரம் ரூபா வாங்கித் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள்.
நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. இதனை பொறுத்துக் கொள்ள எங்களால் முடியாது. இதனாலேயே (06) அன்று நாங்கள் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலை வர்களான பி. திகாம்பரம், வீ. இராதா கிருஷ்ணன், மனோ கணேசன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டு ஒப்பந்தத்தின் அதிக சம்பளம் பெற்று தருவதாகக் கூறி கொண்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் இரகசிய பேச்சுவார்த் தைகள் நடத்தி மக்களை ஏமாற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இம் முறையும் கூட அமைதியாக பேச்சு வார்த்தையை நடத்தி முடித்திருக்கலாம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நினைத்திருந்தாலும் கம்பனிகாரர்கள் இவருடைய கோரிக்கைகளை செவிசாய்க் காத காரணத்தினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பு (8) சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட் டுள்ளது.
நாங்கள் ஒரு போதும் தோட்ட தொழிலாளிகளை காட்டி கொடுப்பவர்கள் அல்ல. அப்பாவி தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு யார் நினைத்தாலும் அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என மேலும் தெரிவித்தார்கள்.
இ.தொ.கா. பொது செயலாளர் ஆறு முகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கை யில்,
தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெற்று 100 ரூபா நியாயமான சம்பள உயர்வு வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன் போது முதலாளிமார் சம்மேளனம் சில குறிப்புகளை கூறியது. அதற்கு எங்களால் ஒத்துபோக முடியாது என்பதால் நாங்கள் தோட்ட தொழிலாளர்களை தொடர்ச்சியாக மெதுவான பணிகளில் ஈடுபடுமாறு அறிவித்திருந்தோம்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் நிறைவுபெறுகின்றது. இம்முறையும் கூட்டு ஒப்பந்தம் முடிந்து சம்பள உயர்வு தொடர்பாக கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் சரியான தீர்வு வழங்கப்படாததன் காரண மாகவே தொழிலாளர்களை மெதுவான வேலை செய்யும் பணியில் ஈடுப்படுமாறு அறிவித்திருந்தோம்.
கடந்த இரண்டு நாட்களாக தொழி லாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதிலும் தோட்ட கம்பனிகள் தொழி லாளர்களின் பிள்ளைகளை சிறுவர் நிலையத்தில் ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு சிறுவர் நிலைய உத்தியோகஸ்தர்களையும் வேலை செய்வதிலிருந்து நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சிறு பிள்ளைகள் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அத்தோடு தோட்டத்தில் உள்ள வெளி உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகஸ்தர்களையும் தொழிலில் ஈடுபட வேண்டாம் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க (07) அன்றைய தினம் சகல தோட்டங்களிலும் உள்ள உத்தியோகஸ்தர்கள் மாலை முதல் தொழிலுக்கு செல்லவில்லை. தோட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட கொழுந்தும் அத்தோட்டங்களில் உள்ள கொழுந்து மடுவங்களில் கொட்டப்பட் டுள்ளது.
அத்தோடு கொழுந்துகளை தொழிற் சாலைக்கு கொண்டு செல்ல கூட வாக னங்களை தோட்ட நிர்வாகம் வழங்க மறுத்துள்ளது. சில அரசியல்வாதிகள் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளில் இருக்கின்றவர்கள் கம்பனியு டன் இணைந்து தொழிலாளர்களையும் எங்களையும் காட்டிக் கொடுக்க முயற் சித்துள்ளனர்.
நாங்கள் எங்களது தொழி லாளர்களை காட்டி கொடுக்க இடமளிக்க போவதில்லை அதனாலேயே இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
போராட்டத்தில் ஈடுபட்டதன் காரண மாக பொலிஸாரும், அரச அதிகாரிகளும் உடனடியாக இவ்விடத்திற்கு வந்துள்ளார் கள்.
தற்போது இது தொடர்பான பேச்சு வார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிக்கிடை யிலேயே நடைபெறுகிறது.
இதற்கும் தொழிலாளர்களின் பிள்ளை களும், சிறுவர் நிலையத்திற்கும், தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் எவ்வித தொடர்பும்இல்லை எனவும் இவ்வாறு செயல்படுகின்ற கம்பனிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்ததோடு தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் பெற்று தரும் வரை நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட போவதாக இவர் மேலும் தெரி வித்தார்.
மெதுவாக வேலை செய்யும் நடவடிக் கைகள் குறித்து முதலாளிமார் சம்மேளனம் தெரிவிக்கையில்,
மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதனால் இலங்கையில் உள்ள 23 கம்பனிகளை சேர்ந்த தோட்ட உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் ஆகியோர் அன்று வேலைக்கு செல்லவில்லை.
குறைவான நிலையில் கொழுந்து பறிப்பதனால் கம்பனிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனா லேயே இவ்வாறு தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுத்ததாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து தங்களுக்கு மலையக தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தங்களின் பாதுகாப்புக்காக தோட்ட நிர்வாகத்திலிருந்து விலகி கொள்ளப் போவதாகவும் மேற்படி தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு தோட்டத்தில் உள்ள வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகஸ்தர்களையும் தொழிலில் ஈடுபட வேண்டாம் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. இவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க சகல தோட்டங்களிலும் உள்ள உத்தி யோகஸ்தர்கள் மாலை முதல் தொழிலுக்கு செல்லவில்லை.
தற்காலிகமாக தொழிற்சாலைகள் மூடுவது தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனம் (07) அறிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினமும் (07) தோட்ட தொழிலாளர்கள் 5 கிலோ, 2 கிலோ மாத்திரமே கொழுந்து பறித்திருக்கின்றார் கள் என தெரியவந்துள்ளது.