யாழ்.மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது!

0
434

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை அனைத்து மட்டங்களிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு  மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்கு மூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண காவல் துறை  நிலையத்திற்கு காவல் துறையினர்  அழைத்திருந்தனர்.

இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த காவல் துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முதல்வரை அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளுக்காக என யாழ்.மாநகர சபை முதல்வரை வவுனியாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அதேவேளை உறுப்பினர் வ.பார்த்திபனிடம் சுமார் 08 மணி நேர  விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தினை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் மணிவண்ணனின் கைது அனைத்து மட்டங்களிலும் பேரதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here