பிரிட்டன் சர்ரேவில் நடந்த உள்ளூர் லீக் ஆட்டமொன்றில், மார்பில் பந்து தாக்கியதால் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் பிரிட்டன் சர்ரேவில் நடந்த உள்ளூர் லீக் போட்டியொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையை சொந்த இடமாக கொண்ட, ஹாட்லி கல்லூரி பழைய மாணவனான பாவலன் பத்மநாதன் எனப்படும் 24 வயது இளைஞனே இவ்வாறு சாவடைந்துள்ளார்.
பாவலன் பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கில் மானிப்பாய் பாரிஷ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்காக விளையாடியிருந்தார். போட்டி ஒன்றின் போது பந்து நெஞ்சில் பலமாக தாக்கியதில் அவர் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.