ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்
அஸ்ராஸெனகா வைரஸ் தடுப்பூசிக்கும்
உயிரிழப்புகளுக்கும் இடையே தொடர்பு
இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
தடுப்பூசி தொடர்பில் அடுத்து எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிப்
பதற்காக ஐரோப்பிய ஒன்றிய மருந்து கள் நிறுவனத்தின் (EMA) அதிகாரிகள்
இரண்டொரு தினங்களில் கூடி விவாதி
க்கவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்குப் பொறுப்பான அதிகாரி Marco Cavaleri,
அஸ்ராஸெனகா தடுப்பூசிக்கும் இரத்தக் கட்டிகளால் ஏற்படுகின்ற மரணங்களுக் கும் இடையே “தெளிவான” (‘clear’) தொட ர்பு இருப்பதை உறுதிப்படுத்தினார்.
ஆனால் தடுப்பூசி எவ்வாறு இரத்தக் கட்டிப்பாதிப்பை உண்டாக்குகின்றது என்பது எமக்கு இன்னமும் புரியவில்லை
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தடுப்பூசிக்கும் இந்த நோய்க்கும் இடையே என்ன நடக்கிறது என்பது
தொடர்பில் தெளிவான ஒரு படத்தைப் பெறுவதற்கு முயற்சித்து வருகின்றோம்.
” தடுப்பூசி ஏற்றியோரிடையே மூளைக் கட்டிகள் ஏற்பட்டுள்ளன. எதிர்பார்த்ததை விடவும் இளையோர்களிடையே அது அதிகமாக உள்ளது”
இவ்வாறு இத்தாலியப் பத்திரிகை ஒன்
றுக்கு Marco Cavaleri தெரிவித்துள்ளார்.
🔴தடுப்பூசி மையங்கள் வெறிச் சோடின
இதேவேளை.- பிரான்ஸில் நாடெங்கும்
தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பா லானவர்கள் ஊசி ஏற்றப்பின்னடித்து
வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. சில தடுப்பூசி மையங்கள் ஊசி ஏற்ற யாரும் இன்றி
வெறிச்சோடிக் கிடக்கும் காட்சிகளைத்
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி உள்ளன.
இங்கிலாந்தின் ஓக்ஸ்போர்ட் மற்றும் சுவீடன் கூட்டுத் தயாரிப்பான அஸ்ரா ஸெனகா தடுப்பூசி மீதான அவநம்பிக் கையே மக்கள் ஊசி ஏற்றப் பின்னடிப் பதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பிரான்ஸில் அஸ்ராஸெனகா தடுப்பூசி யை 55 வயதுக்கு குறைந்தவர்களுக்கு ஏற்றவேண்டாம் என்று நாட்டின் சுகாதார அதிகார சபை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
06-04-2021