கைவிரல்களில் செயற்கையாக நகங் களை ஒட்டுவதற்குப் பயன்படுத்துகின்ற பசைகள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. தோலுக்கும் உடலுக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று
எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் உணவு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பாது காப்புக்கான தேசிய நிறுவனம் (ANSES) இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
அதிகமான பிரெஞ்சு மக்கள் குறிப்பாகப் பெண்கள் வீடுகளில் விரல் நகங்களை அழகுபடுத்தும் இவ்வாறான அழகியல்
பராமரிப்புகளில் ஈடுபடுகின்றனர். நகங்களை ஒட்டுவதற்காக கடைகளிலும்
இணையம் மூலமும் வாங்குகின்ற ‘சயனோஅக்ரிலேட்’ பசைகள் (cyanoac rylate glues) தொடர்பாகவே சுகநலப் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
“சயனோஅக்ரிலேட்” பசைகள் நேரடியா கத்தோலுடன் தொடர்புபடும் போது பெரிய காயங்களை ஏற்படுத்துவதில் லை. ஆனால் அது பஞ்சு மற்றும் துணி போன்றவற்றுடன் சேரும் போது வேதியல் செயற்பாடு காரணமாக அதிக வெப்ப மாற்றத்துக்கு உள்ளாகி தோலில்
கடுமையான தீக்காயங்களை உண்டாக்
கலாம் என்று சுகாதாரப் பாதுகாப்பு நிறு
வனம் தெரிவித்துள்ளது.
நகம் ஒட்டும் பசைகளைக் குழந்தைக ளுக்கு எட்டாத இடங்களில் பாதுகாப்பாக
பேணுமாறும் ஆலோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.
03-04-2021