தென்மராட்சி மண்ணில் கல்விக்கு முன்னிடம் அளித்து தான் சார்ந்த மக்களுக்கும் அயல்கிராமங்களுக்கும் அரும்பணியாற்றுகின்ற மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய வாரிசுகளில் ஒருவரான கல்வியாளர் வே.அன்பழகன் மறைந்து விட்டார் என்ற செய்தியால் துயரமடைகிறேன்.
நண்பனாக சகோதரத்துவத்துடன் அவருடன் பயணித்த நாட்கள்
என்றும் பசுமையானவை .
1990 களில் எமது நட்பு துளிர் விடத்தொடங்கியது அறவழி பொது
நூலகம் எமது சந்திப்புக்கு விதையிட்டது அவர் ஒரு புத்தகப் பிரியர்
வாசிப்பு அவசியம் என்பதை உணர்ந்து புத்தகங்களைத் தேடித்தேடி
வாசிப்பார். மேலும் சஞ்சிகைகள்,பத்திரிகைகள் எல்லாம் உடனுக்குடன் மேய்ந்து விடுவார் .மேலும் மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் சரணாகதி அடைந்து
விடும் “வாசிப்பதால் எழுத்துகள் வசமாகும் என்பார்கள் உங்களுக்கு வாசிப்பது போரடிக்கவில்லையா”என்று கேட்டேன
“வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்”என்று பதிலளித்தார்
பின் தொடர்ந்து கவிதைகள்,கட்டுரைகள் எனத் தான் எழுதிய
பிரதிகளை ஒப்புவித்தார்.
தரம் 05 “ஸ்கொலசிப் சுப்பர் ஸ்ரார்”, ஆரம்ப கல்வியின் புலமைத்தூண் என புகழாரம் சூட்டும் உயரத்தில் அன்பழகன்
நிற்கின்றார்
யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் இவரது புலமை பரிசில் வினாவிடை மாதிரி பயிற்சி தாள்கள் முதலில் வெளியாகின.
செய்திகள் மற்றும் தகவல்களை அறிவதற்காக விற்பனையான
பத்திரிகை அன்பழகன் வினாத்தாளுக்காக விற்பனையாகின.
வருடந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இவரிடம் கற்றதனால் பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளனர்
எட்டுத்திக்கும் கல்வியாளர் அன்பழகன் பெயர் உச்சரிக்கும்
அளவிற்கு அவரது புலமை உயர்ந்தது.
மட்டுவில் வளர்மதி கல்வி கழகத்தின் முன்னோர்கள் காட்டிய
பாதையில் அன்பழகன் போன்ற கல்வியாளர்கள் உருவாக வேண்டும் அதுவே அன்பழகனுக்குச் செய்யும் அஞ்சலிகள்.
நன்றி:ஊடகவியலாளர் துரைசிங்கம்.