ஈழத் தமிழருக்காக ஓங்கிக் குரல் கொடுத்த எம் இனத்தின் மிகப்பெரிய சாட்சியம் ஓய்ந்தது!

0
1075

ஈழத் தமிழர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 80 ஆவது வயதில் இன்று காலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார்.

ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடும்…

இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன் அவர் செய்த சேவைகள் காலத்திற்கும் அழியாது. தன் ஓய்வு காலம் வரை தமிழ்த்தேசியத்திற்காய் குரல் கொடுத்தவர்.

தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் தமிழீழத்தின் மீதும் தீராத பற்றுறுதி கொண்டவர்.

மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்கள்
யுத்தகாலத்தில் மக்களுக்காக இடையறாது தனது சேவையை வழங்கியவர். தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர்.மனித உரிமை மீறல்களுக்காக போராடியவர். தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டவர்.

ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார் என்ற செய்தி அறிந்தவுடன் உலகத் தமிழ் மக்கள் அனைவருமே தமது இரங்கலைப் பகிர்ந்து வருகின்றனர். அன்னாரின் இழப்பில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here