மூன்று வலயங்களுக்கும் இம்முறை
பொதுவான விடுமுறை அறிவிப்பு
பிரான்ஸில் தீவிர தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பாடசாலைகள் இரண்டு பிரிவுகளாக மூன்று, நான்கு வாரங்களுக்கு (விடு முறைஅடங்கலாக) மூடப்படுகின்றன என்று அதிபர் எமானுவல் மக்ரோன்
அறிவித்திருக்கிறார்.
முதல் ஒரு வாரம் வீட்டில் இருந்து கல்வி நடவடிக்கைகளைத் தொடருதல். அடுத்த இரண்டு வாரங்களும் விடுமுறையாகக்
கணிக்கப்படும்.வழமையாக நாடு முழுவதும் பாடசாலைகள் A, B, C என்று
வலயங்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு தினங்களில் விடுமுறைகள்
தொடங்குவது வழக்கம். ஆனால் தொற்றுத் தடுப்பு முயற்சியாக இம்முறை
மூன்று வலயங்களுக்கும் ஒரேசமயத்தில்
விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதன்படி மூன்று வலயங்களுக்கும் ஏப்ரல் 12 முதல் 25 வரை பொதுவான விடுமுறை நாட்களாக இருக்கும். அதற்கு முன்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
தொடக்கம் (திங்கள் பொது விடுமுறை
நாள்) ஒருவார காலம் மாணவர்கள் வீடு
களில் இருந்தவாறு கல்விச் செயற்பாடு களை தொடர வேண்டும். அதன் பிறகு
இரண்டு வார விடுமுறையை முடித்துக் கொண்டு பாலர் மற்றும் ஆரம்ப பிரிவு
மாணவர்கள் (maternelle et de primaire)
ஏப்ரல் 26 ஆம் திகதி பள்ளி திரும்புவர்.
கல்லூரி மற்றும் உயர்தர மாணவர்கள் (collégiens et les lycéens ) ஏப்ரல் 26 க்குப் பிறகும் மேலும் ஒருவாரம் வீட்டில் இருந்தவாறு கல்விச் செயற்பாடுகளைத்
தொடர்ந்த பின் மே மாதம் 3ஆம் திகதியே
மீளப் பள்ளி திரும்புவர்.
பாடசாலைகள் தொடர்பான இந்த ஏற்பாடுகள் “மிகவும் சிக்கலானவை”
என்று தெரிவித்துள்ள பிரதமர், அவை பற்றி தெளிவான விளக்கங்கள் வழங்கப்
படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை –
பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் 19 மாவட்டங்களில் தற்சமயம் நடைமுறை யில் இருக்கின்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நாடு முழுவதுக்கும் விஸ்தரிக்கப்படுகிறது. வதிவிடத்தில் இருந்து பத்து
கிலோ மீற்றர்கள் தூரம் வரை அனுமதிப் படிவத்துடன் நடமாடுவது போன்ற விதிகள் இனி நாடு முழுவதும் இருக்கும்.
நாடளாவிய இந்தக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை மாலை தொடக்கம் நடை
முறைக்கு வருகின்றன. ஏழு மணிமுதல் அமுல் செய்யப்படுகின்ற இரவு ஊரடங்கு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போது திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள
வர்த்தக நிலையங்கள் தொடர்ந்து இயங்க முடியும்.
பிராந்தியங்களுக்கு இடையிலான போக்
குவரத்துகள் ஈஸ்டர் விடுமுறை கருதி எதிர்வரும் சனி-ஞாயிறு தினங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அதன்பிறகு கட்டுப்படுத்தப்படும் எனவும் அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார்.
குமாரதாஸன். பாரிஸ்.
31-03-2021