யேர்மனிய அரசினால் கைதுசெய்யப்பட்டு ஈழத்தமிழ் 26ஏதிலிகளை நேற்று இரவு 21.16 மணிக்கு டுசில்டோர்ப் விண்ணுந்து நிலையமூடாக வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

யேர்மனி போட்சைம் நகரில் அமைந்துள்ள சிறச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

இத்தருணத்தில் யேர்மனி டுசில்டோர்ப் விண்ணுந்து நிலையத்தில் அந்த நாட்டின் இடதுசாரி கட்சிகள் மற்றும் அங்குள்ள மனிதேநேய அமைப்புக்களும் சில கட்சிகளும் அங்கு வாழும் தமிழீழ மக்களும் இணைந்து விமான நிலையத்திற்குள் தமிழர்களை நாடுகடத்துவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டனர்.