சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், இராணுவ அடக்கு முறை, சமூக அடக்கு முறை என்பன தொடர்ந்த வண்ணமுள்ளன.
இவை தொடர்பாக சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது செலுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மனிதவுரிமைகள் நாள் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இடம் பெற்ற வன்னி யுத்தத்திற்கு பின்னர் மனிதவுரிமைகள், அரசியல் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட் டத்தின் பரவி பாஞ்சான் கிராமத்திற்கான மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி தமது கட்சி அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்காக முன்னாயத்த வேலைகளில் ஈடுபட்ட போது அவர் பயங்க ரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைதாகி இன்று வரை அவர் மீதான குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.
இதற்கு காரணம் அவர் மீது எது வித குற்றமும் கண்டறியப்படவில்லை என்பதாகும். இது ஒரு அரசியல் பழி வாங்கலாகும்.
அதேபோன்று காணாமல் போனோர் தொடர்பாக தலைமையேற்று வழி நடத்திக் கொண்டிருந்த ஜெயக்குமாரி என்பவரும் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இது காணாமல் போனோரின் உறவினர்கள் மீதான அச்சுறுத்தலாகும். எனவே இத்தினத்தில் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டுமென சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுக் கொள்வதோடு சகல அரசியல் கைதிகளும் விடு தலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றேன்.
இன்று பெண்கள் மீதான சமூக அடக்குமுறை, இராணுவ அடக்குமுறை, வன் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு தொடர்ந்த வண்ணமுள்ளன.
இது தொடர்பான சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது செலுத்தப்பட வேண்டும் என்றார்.
இதேவேளை வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் உரையாற்றுகையில், சமூகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தமக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின் றார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கில் அவர்கள் நம்பிக்கை இழந்தமையே இதற்குக் காரணம் ஆகும்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண் கள் பொலிஸ் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்போதும் நீதிமன்றங்களில் சட்டவாளர்களினால் கேட்கப்படும் கேள்விகளின் போதும் அவர்கள் உளரீதியாகத் தாக்கம் அடைகின்றனர்.
ஆனால் இவ்வாறான ஒரு சூழல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்ட பொலிஸ் நிலையங்களிலோ தமிழீழ நீதிமன்றங்களிலோ இடம்பெறவில்லை.
அந்தக்காலப் பகுதியில் பெண் கள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றச் செயல்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டது.
ஆனால் இன்று சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிக ரித்துக்கொண்டே செல்கின்றன. எனவே மக்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகள் மற்றும் வன் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஆயத்தமாக வேண்டுமென இன்றைய தினத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் அரசியல் ஆய் வாளரும் சட்டத்தரணியுமான சி.ஜோதிலிங்கம், பிரதேசசபை தவிசாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.