யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பாணுக்குக் கோருகிறது பிரான்ஸ்!

0
454

பிரான்ஸ் அதன் பிரபலம்மிக்க பக்கெற் (baguette) என்னும் பாண் வகைகளை யுனெஸ்கோவின் பண்பாட்டுப் பாரம்பரியம் மிக்க உணவு வகைகளின் பட்டிய
லில் சேர்க்குமாறு கேட்டிருக்கிறது.

அதற்கான மனுவை முறைப்படி சமர்ப்
பித்திருப்பதாக பிரான்ஸ் அரசு வெள்ளி
யன்று அறிவித்துள்ளது.

பிரான்ஸின் அடையாளங்களில் ஒன்றா
கிய பக்கெற் (பாண்) மக்களின் பிரதான
நாளாந்த உணவுகளில் முதலிடத்தில்
இருக்கிறது. ஆண்டுதோறும் பத்து பில்
லியன் பாண் வகைகள் நுகரப்படுன்றன
என்று புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கி றது. பிரெஞ்சு மக்கள் ஒரு செக்கனுக்கு
320 பாண்களை உட்கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக அமுல் செய்யப்பட்டு வருகின்ற பொது முடக்கங் களின் போது பாண் பேக்கரிகள் அத்தி யாவசியக் கடைகளாக அறிவிக்கப்பட்டு அவற்றைத் திறந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு பண்பாட்டோடும் நாளாந்த வாழ்க்கையோடும் பின்னிப்பிணைந்த பாணை யுனெஸ்கோ பட்டியலில் சேர்ப்பதற்கு பிரான்ஸ் விரும்புகிறது.

நாடுகளின் அல்லது இனக் குழுமங்க ளின் வாழ்க்கைப் பண்பாட்டுடன் தொன்
மையான தொடர்புகளைக் கொண்டு
விளங்கும் உணவுகள், பானங்கள் போன் றவற்றை அந்த நாட்டுக்குரிய அல்லது
சமூகத்துக்குரிய தனித்துவம் மிக்கது என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கி
வருகிறது.பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு உணவுப் பாரம்பரியங்களின் பட்டியலில் அவை சேர்க்கப்படுகின்றன.

ஆபிரிக்க நாடுகளில் குறிப்பாக மொரோ க்கோ போன்ற அரபு நாடுகளில் தனித் துவம் மிக்கதாக விளங்கி வருகின்ற
குஸ்குஸ் (couscous) என்ற உணவை
கடந்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய உணவுப் பட்டியலில் சேர்த் துக் கொண்டது.

பிரான்ஸின் பக்கெற் உலகெங்கும் பல நாடுகளது பாரம்பரிய உணவு வகைக ளுடன் போட்டி போட்டு அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

குமாரதாஸன். பாரிஸ்.
27-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here