வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற ஆசிரியர் உயிரிழப்பு!

0
351

வவுனியா – வைரவபுளியங்குளம் குளத்தில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர்த் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை என்பதால், அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, நீண்ட நேர தேடுதலின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியரான 33 வயதான பரந்தாமன் என்பவரே உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here