பளை இத்தாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மகழுந்துடன் , அதற்கு நேரெதிர் திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி காருடன் மோதியுள்ளதாக காாாாவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் பளை – தர்மங்கேணி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய அழகரத்தினம் சற்குணம் மற்றும் பிள்ளைகளான 14 வயதுடைய சற்குணம் சாரங்கன், 11 வயதுடைய சற்குணம் சாருஜன் ஆகிய மூவருமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரான சட்டவிரோத மணல் ஏற்றிவந்த டிப்பர் வண்டியின் சாரதி தப்பியோடியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான தேடுதலை காவல்துறையினர் முன்னெடுத்திருந்த நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.