கிளிநொச்சி – பளை, இத்தாவில் பகுதியில் இன்று (26) இரவு மகிழுந்து – டிப்பர் மோதிய விபத்தில் 9, 12 வயது சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் மகிழுந்து காணப்படுறது, அதற்கு நேரெதிரே டிப்பர் நிற்பதாகவும், எனவே வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து நேர்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் சிறுவர்கள் இருவர் பலியானதுடன் படுகாயமடைந்த நிலையில் சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.