கொரோனாவால் முடங்கியது யாழ்.நகர் – பெருமளவில் படையினர் குவிப்பு!

0
732

பொலிஸார் ,இராணுவத்தினர் ,சுகாதார அதிகாரிகள் யாழ்ப்பாணம் நகரில் திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் கிருமிநாசினி விசிறும் பணி இடம்பெறுகிறது.

பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.

யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ் நகர பகுதியில் அதிகளவான காவல்துறையினர் , இராணுவத்தினர், சுகாதாரத் துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here