பாரிஸ் பள்ளிகளின் விடுமுறையை முன்நகர்த்தி அறிவிக்க கோரிக்கை!

0
841

மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் ஏப்ரல் ஈஸ்டர் பள்ளி விடுமுறையை நேரகாலத்துடன் அறிவிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து பிரான்ஸ் பிராந்தியத்தின் தலைவி
வலேரி பெக்ரெஸ்(Valérie Pecresse) பாடசாலைகளை சுமார் 15 நாட்கள் முன்கூட்டியே ஏப்ரல் 2ஆம் திகதி மூடுமாறு கோரிக்கையை முன்வைத்ததுள்ளார்.அவரது கோரிக்கை சாதக
மாகப் பரிசீலிக்கப்படும் என்று
அரசாங்க உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்
டுள்ள 16 மாவட்டங்களிலும் பாடசாலை
மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே
வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து
வருகிறது.

கல்வி அமைச்சின் தரவுகளின் படி தொற்றுக்குள்ளாகிய மாணவர்களது
எண்ணிக்கை 9ஆயிரத்தில் இருந்து 15
ஆயிரமாக உயர்ந்துள்ளது. 2ஆயிரத்துப் 18 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன.ஆசி
ரியர்களும் பெரும் எண்ணிக்கையில் தொற்றுக்கு இலக்காகி விடுமுறையில் இருப்பதால் அவர்களது இடங்களுக்கு
மாற்றீடாக பதில் ஆசிரியர்களைப் பணி க்கு அமர்த்துவதில் நெருக்கடிகள் ஏற்பட் டுள்ளன.

இதேவேளை –

நாடெங்கும் பொது இடங்களில் ஆறுக் கும் மேற்பட்டோர் ஒன்று கூடுவதைப்
பொலீஸார் தீவிரமாகக் கண்காணித்துத் தடுத்து அபராதங்களை அறவிடுவர் என
உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பொது இடங்களில் கூட்டமாக பலர் ஒன்று கூடிக்குலாவுவது
அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

(படம் மற்றும் தகவல் : BFM தொலைக் காட்சி)

குமாரதாஸன். பாரிஸ்.
25-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here