திருநெல்வேலி போதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
குறித்த சந்தையில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைத் தொகுதி முழுமையாக மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.
திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தமது விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021-222-6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வாறு ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று வெளியிட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் (பனம் பொருள்கள்) வியாரிகளும், மூவர் மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர். அதனால் சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.