பிரான்சில் மர்மமாக இறந்த மருத்துவ மாணவன் அஸ்ராஸெனகா தடுப்பூசி காரணமா?

0
299

தனது அறையில் இறந்து கிடந்த 24 வயதான மருத்துவ மாணவன் ஒருவரது உடலைப் பொலீஸார் மீட்டுள்ளனர். அவரது திடீர் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. அவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றியிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸின் மேற்கே Nantes என்ற நகரத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பு தொடர்பாக சட்ட மற்றும் மருத்துவ ரீதியான விசாரணைகள் நடத்தப்படுகின்
றன. சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு
Nantes (Loire-Atlantique)அரச சட்டவாளர் உத்தரவிட்டிருக்கிறார்.

பல்கலைக்கழக மருத்துவமனையின் (Nantes University Hospital) இறுதி வருட மருத்துவ மாணவனாகிய அந்தனி றியோ (Anthony Rio) என்ற மாணவனே உயிரிழந்தவராவார். தனித்து அறை ஒன்றில் வசித்து வந்த அவர் பத்து நாட்களுக்கு முன் தடுப்பூசி ஏற்றியுள்ளார். கடைசியாக தனது சகோதரருடன் பேசியபோது தனக்கு வயிற்று வலி உணர்வு ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார்.

தடுப்பூசிக்கும் மரணத்துக்கும் தொடர்பு இருப்பது மருத்துவ ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. உடலில் கட்டிகளினால் ஏற்பட்ட இரத்தக் கசிவு மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று
பூர்வாங்க பரிசோதனைகள் மூலம் அறிய வந்துள்ளது-என பிராந்திய ஊடகம் ஒன்று மருத்துவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவன் நல்ல தேகாரோக்கியம் கொண்டவர் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ஆழமான மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளிப்படையாக
அறிவிக்கப்படும் என்று மாணவனின்
குடும்பத்தினருக்கு உறுதி அளிக்கப்பட்
டுள்ளது.

தீவிர பக்கவிளைவுகள் பற்றிய சந்தேகம் காரணமாக அஸ்ராஸெனகா தடுப்பூசியை பிரான்ஸ் உட்படப் பல நாடுகள் இடைநிறுத்தி இருந்தன. ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் உத்தரவாதத்தை அடுத்து பிரான்ஸில் அதன் பாவனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
23-03-2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here