ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுத்த எகிப்திய பெண் எழுத்தாளர் மரணம்!

0
457

எகிப்து நாட்டின் பிரபல பெண்ணிய எழுத்தாளரும் மருத்துவருமாகிய நவல் எல் சதாவி (Nawal El Saadawi) தனது 89 ஆவது வயதில் காலமானார்.

தீவிர மனித உரிமைச் செயற்பாட்டாள
ரான அவர் ஈழத் தமிழர் இனப்படு கொலை தொடர்பாக 2010 ஆம் ஆண்டு
சர்வதேச ரீதியில் நிறுவப்பட்ட முதலாவது மக்கள் நீதி மையத்தில் ( international Peoples’ Tribunal on Sri Lanka) பங்கெடுத் தவர். இலங்கையில் போரின் போதும் போருக்குப் பின்னரும் நடந்த தமிழர் இனப்படுகொலைகளைக் கண்டித்து அவை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்பட
வேண்டும் என்று வாதாடி வந்தவர்.

தனது சொந்த வாழ்விலும் படைப்புகளி லும் அவர் காட்டிய நேர்மை, பெண்களின் பாலின சமத்துவம் மற்றும் உரிமைகளை
நிலைநாட்டுவதில் கொண்டிருந்த தீவிர
பற்றுறுதி என்பன புதிய தலைமுறைக
ளுக்கு ஊக்கமளித்தது. அவரது அறச் சீற்றமும் வெளிப்படையான பேச்சும் அவரை உயிராபத்துகளிலும் சிறைவா சங்களிலும் சிக்க வைத்தன.

தனது சிறு வயது முதல் ஆண்களின் மேலாதிக்கம் நிறைந்த இஸ்லாமியக் கடும் போக்கு சமூகத்தின் மத்தியில் பெண்கள் மீதான அடக்கு முறைகளுக் காகத் துணிந்து குரல் கொடுத்து வந்தவர். தீவிர இஸ்லாமிய மதவாதி களால் கொலை மிரட்டலுக்கு ஆளான அவர் சில காலம் அமெரிக்காவில் தலை
மறைவாக வாழ்ந்தார்.

நவல் எல் சதாவியின் மறைவுக்கு உலகெங்கும் பெண்ணியலாளர்களும் மனித உரிமையாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் கள்’ என்ற அமைப்பும் (Journalists for Democracy in Sri Lanka) சதாவியின் மறைவு குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் வெளியிட்டிருக் கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.
23-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here