
பாரிஸிலும் வெளி மாவட்டங்களிலும் இந்த முறை அமுல்செய்யப்படுகின்ற பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் மிக
வும் தளர்வான போக்குக் காணப்படு கிறது.
அத்தியாவசிய கடைகள் என்ற பெயரில் கிட்டத்தட்ட எல்லா வகையான வர்த்தக நிலையங்களையும் திறக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொது மக்களது நடமாட்டம் கால வரையறை என்று ஏதும் இன்றி அனுமதிக்கப்பட்டுள்ளது. வசிப்பிடத்தில்
இருந்து பத்து கிலோ மீற்றர்கள் சுற்று வட்டாரத்தில் கட்டுப்பாடு இன்றி சமூக இடைவெளியுடன் இரவு ஊரடங்கு நேரம் வரை சுற்றித் திரியலாம்.
கடந்த ஆண்டு மார்ச்சில் முதலாவது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது வீட்டுக்கு வெளியே நடமாடுவது “ஒரு கிலோ மீற்றர்-ஒரு மணிநேரம்” என்ற வரையறைக்குள் இருந்தது.
ஒருவருடம் கடந்து தற்போது மக்களை நடமாட அனுமதிக்கும் காலம் வரையறை யின்றி வழங்கப்படுகிறது. அது ஏன்?
தற்போதைய கட்டுப்பாடுகளை “பொது முடக்கம்” (“confinement”) என்ற சொற்பதத் தில் குறிப்பிடக் கூடாது என்றுஅதிபர் மக்ரோன் அரசாங்க அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றார்.”நெருங்கிய தொடர்பாடல்களைக் குறைப்பதே தொற்றைத் தணிக்கும். ஆனால் தனிப் பட்ட பொறுப்புணர்வுடன் ஒருவர் வெளியே நடந்து செல்வது தவறானது அல்ல” என்றும் மக்ரோன் கூறியிருக் கிறார்.
தற்போதைய இந்த புதிய கட்டுப்பாட்டு நடைமுறைக்கு “மூடி முடக்காமல் தொற்றைத் தணிக்கும்” புதிய உத்தி என்று அரசு பெயரிட்டிருக்கிறது.
அவ்வாறாயின் தொற்று மிகத் தீவிரமாகி
ஆஸ்பத்திரிகள் நிரம்பியுள்ள சமயத்தில் ஏன் இந்தத் தளர்வான போக்கு என்று ஊடகங்கள் அரசை நோக்கிக் கேள்வி களை எழுப்புகின்றன.
அதற்குக் கிடைத்திருக்கின்ற பதில் இதுதான் –
கடந்த ஓராண்டு அனுபவத்தில் பெரும் பாலான அறிவியலாளர்களது ஆய்வு களின்படி மூடிய இடங்களை விடவும் (indoors) பொது வெளியில் வைரஸ் பரவல் வீதம் மிகக் குறைவு என்பது கண்டறியப் பட்டுள்ளது. அதாவது மூடிய அறைகளில் பலர் ஒன்றாக மாஸ்க் அணி யாமல் இருப்பதை விடவும் வெளியே (open air) தனி ஒருவராக மாஸ்க் அணி ந்து நடமாடுவது தொற்றுக்கான வாய்ப் பைக் குறைக்கிறது என்ற முடிவைத் தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
கடந்த மார்ச் 9ஆம் திகதி வெளியிடப்பட்ட பஸ்தர் ஆய்வு நிலையத்தின் (Institut Pasteur) முக்கியமான ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள் ளது. சுமார் 77ஆயிரம் நோயாளர்கள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகள் காற்றோட்ட வசதிகள் இல்லாத மூடிய இடங்களி லேயே பெரும் எடுப்பில் வைரஸ் பரவல் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளன.
சுமார் ஐந்து சத வீத தொற்றுக்களே
வீடுகளுக்கு வெளியே பொது இடங்க ளில் ஏற்பட்டுள்ளன.
பஸ்தர் நிலையத்தின் இந்த முடிவை சர்வதேச ஆய்வுத் தரவுகளும் உறுதி செய்துள்ளன.
அதாவது சமூக இடைவெளி மற்றும் மாஸ்க்கை சரியான முறையில் அணி வது போன்ற சுகாதார விதிகளை சரி
வரக் கடைப்பிடித்தால் வீடுகளை விட பொது இடங்களில் வைரஸ் தொற்று கின்ற வாய்ப்புக் குறைவு என்ற முடிவுக்கு
அறிவியலாளர்கள் வந்துள்ளனர்.
இதைவிட, வீடுகளில் முடங்கிக் கிடப்பது மிக மோசமான உளவியல் தாக்கங்களை
ஏற்படுத்தி வருவதையும் அரசு கவனத்
தில் எடுத்துக் கொண்டுள்ளது.குறிப்பாக
இளவயதினர் அறைகளுக்குள் முடங்கிக்
கிடப்பதால் ஏற்படக் கூடிய சமூக வெடிப்பு கள் பல மட்டங்களிலும் கவலையை ஏற்ப
டுத்தி உள்ளன.இத்தகையதொரு சூழ் நிலையில் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி மக்களை ஒரேயடியாக வெளியில் திறந்து விடவும் முடியாது. அதே போன்று கட்டுப்பாடுகளை இறுக்கி அவர்களை முற்றாக வீடுகளில் முடக்கவும் முடியாது
என்ற இரண்டறு நிலை அரசுக்கு.
ஆகவே சுய கட்டுப்பாட்டுடன் மக்களை வெளியே தாராளமாக நடமாட அனுமதி க்கும் விடயத்தில் இம்முறை அதிக விட்டுக்கொடுப்புச் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொதி நிலையை அடைந்துவருகின்ற உளவி யல் பாதிப்புகளைத் தணிப்பதற்காக அவர்களை அவர்களது பொறுப்பி
லேயே வெளியே தாராளமாக நடமாட விடுவது என்று அரசு உயர்மட்டம் தீர்மானித்திருக்கிறது. அதனாலேயே
தற்போதைய கட்டுப்பாட்டு விதிகளை
‘பொது முடக்கம்'(“confinement”) என்ற சொல்லைப் பயன்படுத்தி அழைப்பதை அரசுத் தலைமை விரும்பவில்லை.
————————————-செய்திக் கட்டுரை.
குமாரதாஸன். பாரிஸ்.
20-03-2021