நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு!

0
988

பிரான்ஸில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 21 மில்லியன் மக்கள் புதிய பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் வந்துள்ளனர்.

பாரிஸ் உட்பட 16 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ள நான்கு வார கால பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் போது வெளியே நடமாடுவோர் பூர்த்தி
செய்யவேண்டிய புதிய அனுமதிப்படிவத்தை உள்துறை அமைச்சு வெளியிட்
டிருக்கிறது.

கிட்டத்தட்ட கட்டுப்பாடு இன்றி மக்கள் வழமை போன்று நடமாடும் அளவுக்கு மிகவும் தளர்வான விதிகள் இம்முறை
காணப்படுகின்றன.

வீட்டில் இருந்து பத்து கிலோ மீற்றர்கள்
சுற்றுப்பகுதிக்குள் இரவு ஏழு மணிவரை
நேர வரையறை ஏதும் இன்றி அனுமதிப் படிவத்துடன் நடமாட இந்தத் தடவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஏழு மணிக்குப் பின்னரும் ஊரடங்கு சமயத்தில் அதேபடி
வத்தை பயன்படுத்த முடியும்.

நடமாடுவதற்கான பல காரணங்களை
உள்ளடக்கிய புதிய படிவம் சற்றுப் பெரியது. இரண்டு பக்கங்களைக் கொண்டது. வெளியே செல்வதற்கான காரணத்தை மட்டும் குறிப்பிடுதல் போதுமானது.ஒவ்வொரு தடவை வெளியே செல்லும் போதும் புதிதாக படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

புதிய படிவம் உள்துறை அமைச்சின் உத்தியோக பூர்வ இணையப் பக்கத்தி லும் site du ministère de l’Intérieur,மற்றும்
l’appli TousAntiCovid செயலி ஊடாகவும் கிடைக்கும். டிஜிட்டல் மற்றும் காகித வடிவங்கள் இரண்டிலும் அதனைப் பெற்
றுக்கொள்ள முடியும்.

அனுமதிப்படிவத்தை படிவத்தை வைத்திருக்காதவர்களும், வதிவிட முகவரியில் இருந்து பத்து கிலோ மீற்றர்கள் தூரம் தாண்டி வெளியே செல்வோரும் வழமை போன்று தண்டப் பணம் செலுத்த நேரிடலாம்.

தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ் வேறு ஒரு பிராந்தியத்துக்கு பயணிப்பது

தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கான தேவை இருப்போர் தொழில் போன்ற தகுந்த காரணங்களைக்காட்ட வேண்டும்.

குமாரதாஸன். பாரிஸ்.
20-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here