மே18 தமிழின அழிப்பு நாளினை நினைவுகூரும் முகமாக பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினால் படைப்பாளிகளுக்கு ஓர் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தல் வருமாறு:-
வணக்கம்!
அனைத்துக் கலைஞர்களினதும் கவனத்திற்கு…
மே18 தமிழின அழிப்பு நாளினை நினைவுகூரும் வகையில் கவிதை,நடனம் மற்றும் ஓவியம் போன்ற படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். கவிதை,நடனங்களை ஒலி,ஒளிப்பதிவுகள் செய்தும் ,ஓவியங்கள் போன்ற உணர்வு வெளிப்பாடுகளான தங்களது படைப்புக்களை கீழ்த்தரப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளினூடாகவோ அல்லது
மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
அதனடிப்படையில் தங்களால் எவ்வகையிலான படைப்புக்களையும் எதிர்வரும் April மாதம் 15 ம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் கிடைக்கும் வெளிப்பாடுகள் கால எல்லையை அடிப்படையாகக் கொண்டு எம்மால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது
என்பதோடு
படைப்புக்கள் அனைத்தும் தமிழின அழிப்பின் சாட்சியங்களாக இருத்தல் வேண்டும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தெரிவு செய்யப்படுகின்ற ஆக்கங்கள் அனைத்தும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு என்கின்ற முகநூல் மற்றும் you tube ஆகிய வலைத்தள செயலிகள் ஊடாக காணொளிகளாக காட்சிப்படுத்தப்படும் அதேவேளை தெரிவு செய்யப்படும் ஓவியங்கள் தமிழின அழிப்புநாள் may 18 பேரணியில் பதாகைகளாக கொண்டுவரப்படும்
மின்னஞ்சல் முகவரி:-Tkpkf.officeal@gmail.com
தொடர்புகளுக்கு:-
-07 69 26 52 13
- 06 51 71 26 98
மேலதிக தொடர்புகளுக்கு:
-01.48.22.01.75(CCTF)
தகவல்:-தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு
நன்றி