பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து- பிரான்ஸ் பிராந்தியத்துக்கு மேலும் கட்டுப்பாடுகளை அரசு நாளை அறிவிக்க வுள்ளது. வார இறுதி சனி – ஞாயிறு தினங்களில் முழுமையான பொது முடக்கக் கட்டுப்பாடு அமுல்செய்யப் படவுள்ளது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தினமும் மாலை ஆறு மணிமுதல் அமுலில் இருக்கின்ற ஊரடங்கு விதிகளுக்கு மேலதிகமாக புதிய கட்டுப்பாடுகள் வரவிருக்கின்றன.
நீஸ் போன்ற நகரங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை ஒத்த விதிகள் தலைநகரத்திலும் பேணப்படவுள்ளன.
பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோர் நாளை வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அறி
விக்கப்படவுள்ளன.
அதிபர் மக்ரோன் தலைமையில் இன்று நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இல்-து-பிரான்ஸ் மற்றும் மேல் பிராந்தியம் (Hauts-de-France)
ஆகிய பகுதிகளில் எவ்வாறான பொது முடக்கக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது என்பது தொடர்பாக ஆராயப் பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்திருக்கிறார்.
கடந்த நவம்பரில் இரண்டாவது தொற்றலைக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்ற சுகாதார விதிகளை பிரதமர் நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படு
வதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தொற்றாளர்களது எண்ணிக்கை அதிக ரித்ததை அடுத்து பாரிஸ் மருத்துவ மனைகளில் பெரும் அழுத்தமும் நெருக் கடியும் ஏற்பட்டுள்ளது. அதனைக் கவனத்தில் எடுக்காமல் காலத்தை இழுத்தடித்துவருவதாக அரச உயர்மட்டம் மீது மருத்துவ வட்டாரங்கள் அதிருப் தியை வெளியிட்டு வருகின்றன.இன்று மாலை வெளியாகிய புள்ளி விவரங்க ளின்படி கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 500 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 357 பேர் உயிரி ழந்துள்ளனர்.
இந்த நிலையில் அதிபர் மக்ரோன் இன்று
பாரிஸ் புறநகரானPoissy-Saint-Germain-en Laye இல் உள்ள மருத்துவமனைக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டார்.
குமாரதாஸன். பாரிஸ்.
17-03-2021