தமிழர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (17) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று நிறைவடைந்தது.
பேரணியில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
(உதயன்)