உணவகங்களை மூன்று கட்டங்களில் திறக்கத் திட்டம்!

0
665

பிரான்ஸ் நாட்டில் உணவகங்கள், அருந்தகங்களை படிப்படியாக மூன்று கட்டங்களில் திறப்ப தற்கு உரிமையாளர்களுடன் அரசு கலந்தாலோசித்து வருகிறது. திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

நான்கு வாரகால இடைவெளிகளைக் கொண்ட அந்த மூன்று கட்டங்களுக்கு மான நேர அட்டவணை, தொற்று வீதம், தடுப்பூசி ஏற்றப்பட்டோரின் எண்ணிக்கை என்பனவற்றை நிபந்தனையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கி
றது.

நீண்டகாலமாக முடங்கிப் போய் உள்ள உணவகத் துறையை மீள இயக்கி வழமைக்குக் கொண்டுவருவது பற்றி உணவகங்கள், மற்றும் ஹொட்டேல், உணவு சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.

ஹொட்டேல்கள், மற்றும் அரச தனியார் பணிமனைகளில் பலர் ஒன்றாகக்கூடி உணவு அருந்துகின்ற இடங்களையும் அங்குள்ள அருந்தகங்களையும் முதலில் திறப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.(les salles des hôtels pour y prendre petit déjeuner et dîner.)

இரண்டாவது கட்டமாக சகல உணவகங்க ளையும் (restaurants) அருந்தகங்களையும் (Bars) அவற்றின் வெளி இருக்கைகளை (terraces) முழுமையாகவும் உள்ளே உணவு அருந்தும் இடங்களை அரைவாசியாக ஐம்பது வீதமும் திறந்து இயங்க அனுமதிப்பது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. (la deuxième étape permettrait de retrouver les terrasses des restaurants et des bars, ainsi que les salles en intérieur à 50% de leur capacité.)

மூன்றாவது இறுதிக் கட்டத்தில் உணவ கங்கள் அருந்தகங்கள் அனைத்தையும் கண்டிப்பான சுகாதார விதிகளுடன் முழு அளவில் இயங்க அனுமதிப்பது. (La troisième et dernière phase serait une réouverture totale, avec application du protocole renforcé mis en place en octobre 2020 : distance entre les tables, pas plus de six à table, masques et gel hydroalcoolique)

சகல பிரஜைகளுக்கும் அரசு விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் சுகாதார “கியூஆர் கோட்” (QR Code) பரிசோதனை உணவகங்கள், அருந்தகங்களின் வாயில்களில் கட்டாயமாக்கப்படவுள் ளது என்றும் கூறப்படுகிறது.

வைரஸ் தொற்றும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ள இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் உணவகங்கள், அருந்த கங்கள், உள்ளக விளையாட்டு அரங்கு கள் என்பன உள்ளன. இதனை சுகாதார அறிவியல் நிபுணர்கள் குழு மீண்டும் சுட்டிக்காட்டி உள்ளது.

எனவே உணவகங்களைத் திறப்பது பெரும்பாலும் நாடு சுகாதார நெருக்கடி யில் இருந்து விடுபடுகின்ற கடைசிக் கட்டத்திலேயே நிகழ வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்படுகிறது.

(அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை பிரெஞ்சு மொழி வாக்கியங்கள்)

குமாரதாஸன். பாரிஸ்.
17-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here