பிரான்ஸின் Bretagne பகுதியில் புதியதொரு திரிபு வைரஸ் பரவல்!

0
643

உலகெங்கும் கொரோனா வைரஸின் மரபு மாற்றம் அடைந்த புதிய கிருமிகள் பரவி வரும் நிலையில் பிரான்ஸின் Bretagne பகுதியிலும் புதிய வைரஸ் திரிபு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

பெரிதும் ஆபத்து இல்லாத ஆனால் சாதாரண பிசிஆர் பரிசோதனையில் கண்டறிய முடியாத மாறுதலடைந்த அந்தத் திரிபு அங்கு பலருக்குத் தொற்றி உள்ளது என்ற தகவலை Bretagne பிராந்திய சுகாதார நிறுவனம் (L’Agence régionale de santé de Bretagne) இன்று
வெளியிட்டுள்ளது.

அங்குள்ள ஒரு மருத்துவமனையில் (centre hospitalier de Lannion) கொத்தணி யாக அடையாளம் காணப்பட்ட 79 பேரில் எட்டுப் பேருக்கு புதிய திரிபு தொற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின்னர் கடந்த ஓராண்டு காலப்பகுதி யில் பிரான்ஸின் எல்லைக்குள் கண்டு
பிடிக்கப்படுகின்ற முதலாவது வைரஸ் திரிபு இதுவாகும். ஏற்கனவே இங்கி லாந்து, தென்னாபிரிக்கா, பிறேசில்
போன்ற நாடுகளில் அவதானிக்கப்பட்ட
வைரஸ் திரிபுகள் பிரான்ஸில் பரவியுள்
ளன.

“Bretagne திரிபை” (variant breton) உறுதிப்படுத்தியுள்ள பஸ்தர் நிறுவனம், அது தொடர்பான மேலதிக ஆய்வுகளை நடத்தி வருகின்றது.

குமாரதாஸன். பாரிஸ்.
16-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here