“ சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப்பிறவியும் சரித்திரம் படைக்க முடியும். மலைபோல் மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை எந்தப் பெரிய சவாலையும் நாம் சந்திக்கத்தயார் – தமிழீழ தேசியத் தலைவர் – அவர்கள் சிந்தனை
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்
போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியம் பயணம் ஒருநாளும் மாறாது என்பதற்கிணங்க எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கும், பிரெஞ்சு அரசுக்கும் எடுத்துச் செல்வோம்.
எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைச் சாட்சியங்கள், அதற்கான நீதி சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் தரும் வரை ஒற்றைத் தமிழனும் ஓய்ந்து போகப்போவதில்லை. எமது நியாயமான போராட்டங்கள் அங்காங்கே நீர்த்துப்போகச் செய்தாலும் நாம் தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.
ஐ. நா மனிதவுரிமைகள் 46 ஆவது கூட்டத்தொடரில் ஈழத்தமிழ் மக்களின் நியாயப் பாட்டை மதித்து கிடைக்கும் முன்மொழிவை இறுகப்பற்றி நாம் அடுத்த கட்ட நிலைப்பாட்டிற்கு நம்பிக்கையோடு பயணிப்போம். எமது மக்களின் சக்தி எம்பின்னால் இருக்கும் வரை தொடர்ந்து நாம் ஓரணியில் பயணிப்போம்.
தொடர் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 17.03.2021 புதன்கிழமையும், 23.03.2021 செவ்வாய்க்கிழமை பி.பகல் 14.45 முதல் 16..45 மணிவரை
பாரிசு லாச்சப்பல் பகுதியில் (வழமையான இடத்தில்)
அனைவரும் ஒன்று கூடுவோம்
தமிழீழ மக்கள் பேரவை – தமிழ் இளையோர் அமைப்பு
06 52 72 58 67 மேலதிக தொடர்புகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு 01 48 22 01 75