பொது முடக்கத்துக்குள் தங்கள் பணி களைத் தொடர்ந்து மேற்கொண்ட சில
துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு விசேட போனஸ் கொடுப்பனவாக ஆயிரம் ஈரோக்கள் வழங்கப்படவுள்ளது. சுத்திகரிப்பு, பாதுகாப்பு, காசாளர் போன்ற கடமைகளில் ஈடுபட்டோருக்கே
கொடுப்பனவு கிடைக்கவுள்ளது.
வரிகள், கழிவுகள் ஏதும் இன்றி இந்தத் தொகையை பணியாளர்களுக்கு வழங்குவதற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று பிரதமர் Jean Castex நேற்று தொழில் வழங்குநர்களுடன் நடத்திய மாநாட்டின் முடிவில் அறிவித் தார்.
சிறிய, பெரிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் சகலருக்கும் இந்தக் கொடுப்பனவை வழங்கவேண் டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவ்வாறு சகலருக்கும் போனஸ் தொகை வழங்கும் கட்டாயம் தொழில் வழங்குநர்களுக்கு கிடையாது என்று முதலாளிமார் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நெருக்கடி காலத்தில் பணியாற்றியோர் தவிர்ந்த மற்றைய பணியாளர்களுக்கும் ஆயிரம் ஈரோக்கள் போனஸ் கிடைக்குமா என்பது இனிமேல் தான் தெளிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. சுகாதார நெருக்கடியால் மீள முடியாது முடங்கிப் போயுள்ள உணவகம் போன்ற துறைகளின் பணி யாளர்களுக்கு போனஸ் கிடைக்க வாய்பில்லை என்றும் சுட்டிக்காட்டப் படுகிறது.
மஞ்சள் மேலங்கி நெருக்கடியை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்ட “மக்ரோன் போனஸ்”(“Macron bonus”)என்ற உதவித் திட்டத்தின் கீழேயே சுகாதார நெருக்கடி காலப் பகுதியில் நிறுத்தாமல் கடமைகளைத் தொடர்ந்த பணியாளர் களுக்கு ஆயிரம் ஈரோக்கள் போனஸ் வழங்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்குள் முன்னரங்கில் நின்று பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறைசார் பணியாளர்களுக்கு விசேட போனஸ் கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று இரண்டாவது வரிசையில் தொற்று ஆபத்து மிகுந்த சூழ்நிலைக
ளில் தங்கள் பணிகளைப் புரிந்த வேறுசில தொழிற்துறையினர்களுக்கே இந்த போனஸ் கொடுப்பனவைவழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த போனஸ் தொடர்பான மேலதிக விவரங்கள் எதுர்பார்க்கப்படுகின்றன.
குமாரதாஸன். பாரிஸ்.
16-03-2021