அஸ்ராஸெனகா தடுப்பூசி அச்சம்: பிரான்ஸ் இடை நிறுத்தியது! நோர்வேயில் பெண் உயிரிழப்பு!

0
713

பிரான்ஸில் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவது உடனடியாக இடைநிறுத்தப்படுகிறது.

தடுப்பூசி தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ முகவரகத்தின் தீர்மானம் நாளை செவ்வாய்க்கிழமை மாலை வெளியாகும் வரை ஊசி ஏற்றுவது முற்பாதுகாப்புக் கருதி இடை நிறுத்தப்படுகிறது என்று அதிபர் மக்ரோன் அறிவித்திருக்கிறார்.

‘அஸ்ராஸெனகா’ தடுப்பூசிப் பயன் பாட்டை இடைநிறுத்துவது என்ற ஜேர்மனியின் அறிவிப்பு வெளியான கையோடு பிரான்ஸின் இந்தத் தீர்மானத்தை அதிபர் மக்ரோன் வெளியிட்டிருக்கிறார். ஆய்வுக்குப்
பின்னர் மிக விரைவிலேயே அதன் பாவனை மீளத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Montauban நகரில் நடைபெறுகின்ற பிரான்ஸ் – ஸ்பெயின் நாடுகளின் 26 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அரசுத் தலைவர் மக்ரோன், அங்கு வைத்தே இந்தத் தீர்மானத்தை அறிவித் தார்.

(படம்:Montauban இல் நடைபெறும் ஸ்பெயின் – பிரான்ஸ் இருதரப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் அதிபர் மக்ரோன்)

இதேவேளை, பிரான்ஸின் Bouches- du-Rhône பிராந்தியத்தில் அஸ்ராஸெ னகா தடுப்பூசி ஏற்றிய தீயணைப்பு வீரர் ஒருவர் 48 மணிநேரத்தில் தீவிர பக்கவிளைவைச் சந்தித்ததை அடுத்து அங்கு தீயணைப்பு வீரர்களுக்கு (sapeurs- pompiers) தடுப்பூசி ஏற்றுவது மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தப் பட்டுள்ளது.

ஊசி ஏற்றிக்கொண்ட வீரருக்கு ‘cardiac arrhythmia’ எனப்படும் இருதயப் பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. அதற்குத் தடுப்பூசி காரணமா என்பது உறுதியாகக் கூறப்படவில்லை.

நோர்வேயில் தடுப்பூசி ஏற்றிய பின்னர் சுகவீனமுற்ற மூன்று பெண்களில் ஒருவர் உயிரிழந்தார் என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் இன்று அறிவித் துள்ளனர். 50 வயதுக்குக் குறைந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவரே மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு (cerebral hemorrhage) காரணமாக உயிரிழந்துள்ளார்.அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவதை நோர்வே உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இடைநி றுத்தி உள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.
15-03-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here