பிரித்தானியாவில் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணா மறுப்புப் போராட்டத்தை நடாத்தி வரும் அம்மையார் அம்பிகை செல்வக்குமார் அவர்களின் 4 ஆம்சக் கோரிக்கையை பிரித்தானியா அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்பிகை செல்வக்குமார் அவர்களின் போராட்டத்தோடு உலகில் பல நாடுகளில் அறப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பிரான்சில் 14.03.2021 இன்று பாரிசு றிபப்ளிக் சுதந்திரதேவியின் சிலைக்கு முன்பாக தமிழர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.