தமிழீழத்திலே இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு தமிழ் கற்பித்து, புலம் பெயர் தேசத்திலும் பல இலக்கிய மாணிகளை உருவாக்கிய பேராசான் பேராசிரியர் அறிவரசன் ஐயாவினதும், புலம் பெயர் தேசத்தில் தமிழ்ப்பணி தொடங்கிய காலத்தில் இருந்து பாட நூலாக்கத் தந்தையாக திகழ்ந்த முனைவர் நா.சி.கமலநாதன் அவர்களினதும் முதலாமாண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று பிரான்சு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
கொரோனா சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்டவர்களோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவுரைகளும் இடம்பெற்றன.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)