இந்தியத் தூதுவருடனான இன்றைய சந்திப்பில் கஜேந்திரகுமார்!

0
251

இந்தியத் தூதுவருடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். இன்றைய சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-

இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கின்றோம். ஆனால் அதன்வழியான 13ம் திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தீர்வாக ஏற்கமுடியாது. தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும் தீர்வைத் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

இந்தியப் பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும். நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர். பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கின்றோம். இதனால் பாதிக்கப்படப்போவது எமது மக்களே!

தமிழர் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகித்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here