வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சீர்செய்ய யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியிலும் கச்சேரி – நல்லூர் வீதியிலும் காவல்துறையினர் மாற்றப் பாதைகளில் வாகனங்களை அனுப்புகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட நிரந்த நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.