பிரான்சில் Noisy le sec நகரபிதாவுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு!

0
616

Noisy le sec நகரபிதாவுடனான முதல் சந்திப்பு Noisy-le-Sec தமிழ்ச்சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இன்று 09/03/2021 செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நகரபிதா திரு.Olivier Sarrabeyarose அவர்களும் அவரது செயலாளரும் தமிழர் தரப்பு பிரதிநிதிகளாக Noisy le sec தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மகாலிங்கம் சசிகுமார், Noisy le sec தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி தர்மினி சசிதரன், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு பிரான்சு அரசியல் பிரிவைச் சேர்ந்த திரு. பொ. பாலகுமாரன், பிரான்சு தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதி திரு.பிரதீப், தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதி செல்வி அகேந்டிரா ஆகியோர் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் நகரபிதாவுக்கு எம்மக்கள் சார்பாக பூச்செண்டு வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் எமது மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள தேசியம் சார்ந்த நெருக்கடிகள் தொடர்பாகவும் எவ்வாறு எமது இனம் இலங்கை அரசால் அழிக்கப்பட்டது என்பதையும் வரலாற்று ரீதியாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது. அத்தோடு தற்பொழுது பிரான்சு வாழ்தமிழ்மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயகரீதியான போராட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இனப்படுகொலை தொடர்பாகவும் தமிழீழம்தான் தமிழ் மக்களுக்குத் தீர்வாக அமையவேண்டும் என்று நகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றவேண்டும் என்று எம்மால் கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்தையும் மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த நகரபிதா அவர்கள் நகரசபைக்கூட்டத்தில் நாம் மும்மொழிந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதாக எமக்கு உறுதியளித்ததோடு, எமது மக்களுக்கு தேவையான தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here