பிரான்சில் உணவகங்கள் திறக்கப்பட்ட பிறகும் அவற்றுக்கான உதவிகள் நீடிக்கும்

0
122

உணவகங்களை மீண்டும் திறந்து இயங்க அனுமதித்த உடனேயே அவற்றுக்கான அரச உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டுவிடமாட்டாது. இணக்கப் பாட்டின் அடிப்படையில் சில காலம் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு உணவக உரிமையாளர் களுக்கு அரசு உறுதி மொழி வழங்கி உள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இத்தகவலை வெளியிட்ட அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால், உணவகங்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கூறவில்லை.

பல பிராந்தியங்களில் வார இறுதிப் பொது முடக்கங்கள் அமுலில் இருந்து வருகின்ற நிலையில் உணவகங்கள், அருந்தகங்கள் உடனடியாகத் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

வைரஸ் நெருக்கடி காரணமாக உணவகங்கள் கடந்த ஓராண்டு காலம் முடக்கத்தை சந்தித்துள்ளன. பிரான்ஸில் புலம் பெயர்ந்து வசிக்கின்ற தமிழர்களது பிரதான தொழில் மையங்களான உணவகங்கள் மூடப்பட்டிருப்பது பல வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அரச உதவிகளை முழுமை யாகப் பெற முடியாத நிலையில் தமிழர் கள் பலரும் வேறு தொழில் துறைகளை நாடத் தொடங்கி உள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.
08-03-2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here