ஐ.நாவுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி இயக்கம் மேன்முறையீடு!

0
146

2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மேன்முறையீடு செய்து கடிதம் அனுப்பியுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துதலை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்குதல் தொடர்பிலேயே இந்த முறையீட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கீழே ஒப்பமிட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினர் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமூக மற்றும் சமய அமைப்புக்களைச் சேர்ந்தோருமாகிய நாங்கள் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானமானது குறிப்பாக தமிழ்ச் சமூகத்தினுடைய அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும், விசேடமாக தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றமை மற்றும் தமிழப் பெண்களை வன்புணர்ந்தமை அடங்கலான இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட கொடூரமான குற்றங்களின் பொருட்டான சர்வதேசத்தின் பொறுப்புக்கூறலைப் பூர்த்திசெய்யவில்லை எனக் கருதுகிறோம்.

இணை-அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்குவதற்கான மேன்முறையீட்டின் பொருட்டு நாம் இதனை வரைகிறோம்.

நிலவரத்தின் தீவிரத்தன்மையின் காரணமாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று தமிழர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு ஓர் கடிதத்தை அனுப்பியிருந்தோம். இந்த அழைப்பானது அண்மையில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் பங்குபற்றிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) என்ற பேரணியின் மூலமாக வலுச்சேர்க்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here