மாமனிதர் கிட்டினன் சிவனேசன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவேந்தப்பட்டது.

06.03.2008 அன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, கண்டிவீதியில் மாங்குளம் பிரதேசத்திலுள்ள கொல்லர் புளியங்குளம் பகுதியில் வைத்து சிங்கள பௌத்த பேரினவாத படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் கிளைமோர் தாக்குதல் மூலம் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
அந்த சம்பவத்தில் அவரும் அவரது சாரதியும் உயிரிழந்தனர். சிவநேசன் அவர்களின் மறைவுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்திருந்தார்.