பிரான்சில் அதிக இளந்தலைமுறையினர் ‘இளங்கலைமாணி’ பட்டம்பெற்று சாதனை!

0
2778

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ் இணையக் கல்விக் கழகம் – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழியல் பட்டக்கல்வியை நிறைவு செய்துகொண்டு ஏழு பட்டகர்கள் கடந்த கிழமை வெளியேறியுள்ளனர்.
இவர்களில் ஐவர் தமிழ்ச்சோலைகளில் வளர் தமிழ் 12 நிறைவுசெய்து, மேற்படி தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள் ஆவர்.

தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ், பிரெஞ்சு அரசால் பட்டமேற்படிப்பிற்கு ஐரோப்பிய மட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரே பருவத்தில் அதிக இளந்தலைமுறையினர் இளங்கலைமாணிப் பட்டம் பெற்று வெறியேறுவது இதுவே முதற் தடவையாகும் (Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence (bac +3)).
1.தவராஜா சஞ்ஜித் (AUBERVILLIERS தமிழ்ச்சோலை )
2.கிருஷ்ணகுமார் தர்சிகா (PARIS 15 தமிழ்ச்சோலை)
3.தங்கத்துரை தாட்சாயினி (NEUILLY SUR MARNE தமிழ்ச்சோலை )
4.சோதிராசா சோபியா (PARIS 13 தமிழ்ச்சோலை)
5.சுப்பிரமணியம் மெலானி (CRETEIL தமிழ்ச்சோலை)
6.சுதாகரன் புவனேஸ்வரி
7.சாந்தகுமார் றஜனி

ஆகியோரே பட்டம்பெற்று வெளியேறுபவர்களாவர்.

பட்டம்பெற உந்துசக்தியாகத் திகழ்ந்த பெற்றோர்கள் நிகழ்வொன்றின் மூலம் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். அதே நிகழ்வில் கடந்த காலங்களில் மேற்சான்றிதழ் நிலை, பட்டயம் ,மேற்பட்டயத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அத்தோடு இணையக் கல்விக்கழக வரலாற்றில் முதற்சாதனை ஒன்றையும் பிரெஞ்சு இளையதலைமுறை மாணவியொருவர் நிகழ்த்தியுள்ளார்.

இணையவழித் தேர்வு பகுதி – 1 மற்றும் பகுதி – 2 ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு புள்ளிகளைப் பெற்று முருகதாஸ் ஜதுர்ஷனா எனும் மாணவியே இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். உலக மட்டத்தில் இரு இணையவழித் தேர்விலும் 100 புள்ளிகள் பெற்றிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

இந்தப் பருவத்தில் நுழைவுத் தேர்வில் பங்குகொண்ட ஏனைய பத்து மாணவர்களும் இரு இணையவழித் தேர்விலும் சராசரியாக 80 இற்கும் அதிகமான புள்ளிகள் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  1. கலாறஞ்சன் டினோஜன் (சேர்மனி)
  2. கமலதாசன் கபிலேஷன் ( ESSEN தமிழாலயம் சேர்மனி)
  3. குலநாதன் விவேக்கா ( Le Blanc Mesnil தமிழ்ச்சோலை )
  4. பிரபாகரன் பிரியங்கா ( Le Blanc Mesnil தமிழ்ச்சோலை )
  5. கிருஸ்ணபிள்ளை துலக்சனா ( Le Blanc Mesnil தமிழ்ச்சோலை )
  6. துஸ்யந்தன் இயல்வாணி ( Le Blanc Mesnil தமிழ்ச்சோலை )
  7. தம்பிப்பிள்ளை ஜெதுர்ஷா ( Le Blanc Mesnil தமிழ்ச்சோலை )
  8. முருகதாஸ் ஜதுர்ஷ்னா ( La Courneuve தமிழ்ச்சோலை )
  9. றெனோல்ட் பேர்னாட் ஜோய் எல்ரன் (Le Blanc Mesnil தமிழ்ச்சோலை )
  10. மயுரன் நிருஷன் (La Courneuve தமிழ்ச்சோலை )
  11. அமலதாஸன் பவியோலா (La Courneuve தமிழ்ச்சோலை )

ஆகிய மாணவர்களே இணையத் தேர்வில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களாவர். கடந்த ஒன்பது ஆண்டுகளாக, தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ்நாட்டின் தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து மேற்படி தமிழியல் பட்டப்படிப்பை நடத்தி வருவதோடு, பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்களை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தமிழ்ச்சோலைத் தமிழியல் நடப்பாண்டுப் பருவதேர்வுகள் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்திலும் சோதியா கலைக்கல்லூரியிலும் நாட்டின் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தவாறு பெப்ரவரி மாதம் 13 தொடக்கம் 28 வரையான நாட்களில் நடைபெற்றன.

மேலும் மார்ச்சு 30 ஆம் திகதி வரை மாணவர் சேர்க்கை இடம்பெறும் என தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here