நல்லூரில் மூன்றாவது நாளாகத் தொடரும் உணவு மறுப்புப் போராட்டம்!

0
699

நல்லூரில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்று (2) கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்துகொண்டனர்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்திற்கு பலரும் தமது ஆதரவினை தெரிவித்து இணைந்துள்ள நிலையில், இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here