பாரிஸை மூன்று வாரம் முடக்கிவிட்டு பின்னர் உணவகங்களை திறவுங்கள்!

0
358

பாரிஸை மூன்று வாரம் முடக்கிவிட்டு பின்னர் உணவகங்களை திறவுங்கள் என்று பாரிஸ்
நகரசபை பிரான்ஸ் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மூன்று வார காலம் மிக இறுக்கமான பொது முடக்கத்தை அமுல்ப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டிருக்கும் பாரிஸ் நகர சபை, அதன் பிறகு உணவகங்கள் உட்பட எல்லாவற்றையும் திறந்து இயங்க விடுமாறு கோரியுள்ளது.

வார இறுதி நாட்களில் மட்டும் நகரங் களை முடக்குவது என்ற அரசின் திட்டம் மேலும் காலத்தை இழுத்தடிக்குமே தவிர அதனால் உருப்படியான- முழுமையான- பலன் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும் பாரிஸ் நகரசபை தெரிவித்துள் ளது.

தொற்றுத் தீவிரமாக உள்ள நகரங்களில் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் பொது முடக்கங்களை உள்ளூர் மட்டத்தில் நடைமுறைப்படுத்துவது என்ற அரசின் திட்டத்தை எதிர்த்தே பாரிஸ் நகரசபை இந்த ஆலோசனையை முன்வைத் துள்ளது.

பாரிஸ் நகரம் உட்பட நாட்டின் 20 மாவட் டங்கள் தீவிர தொற்றுப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன என்று நாட்டின் பிரதமர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த சிறிது நேரத்தில் பாரிஸ் நகரசபையின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நகரசபையின் இந்த யோசனையை துணை மேயர் Emmanuel Grégoire வெளியிட்டிருக்கிறார்.

“நாங்கள் மாதக் கணக்கில் இப்படியே கிட்டத்தட்ட சிறைவாசம் போன்று வாழ்வைக் கழித்துவிட முடியாது. துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது” – என்று துணை மேயர் Grégoire தெரிவித்திருக் கிறார்.

விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கும் போது வைரஸ் தொற்று மேலும் தீவிரமடையும். எனவே குறுகிய காலத்துக்கு – மூன்று வாரங்களுக்கு – மிகவும் இறுக்கமான பொது முடக்கத்தை பேணுவதன் மூலம் பெரியளவிலான பயனை பெற்றுக் கொண்டு அதன் பிறகு உணவகங்கள், அருந்தகங்கள், பொழுது போக்கு மையங்கள் அனைத்தையும் திறந்து இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு நகரசபை தனது யோசனை யில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

பல மாவட்டங்களுடன் போக்குவரத்து மற்றும் தொடர்புகளைக் கொண்டுள்ள தலைநகரத்தை தனியே மூன்று வாரகாலத்துக்கு முழுமையாக முடக்கி வைப்பது சாத்தியமா என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க் கட்சிகள், பாரிஸ் நகரமேயரது இந்த யோசனையை விமர்சித்துக் கருத்து வெளியிட்டுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்.
26-02-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here