“பொறுப்புள்ள ஓர் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.”
கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் (Alaina B. Teplitz) இவ்வாறு கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
வடக்கில் காணாமற்போனவர்களது குடும்பத்தினர்களைச் சந்தித்து உரையாடியது குறித்து அவர் தனது ருவீற்றர் பக்கத்தில் படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ள தருணத்தில் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணப் பகுதிக்கு விஜயம் செய்துள்ள அவர் அங்கு காணாமற் போனவர்களது குடும்ப உறுப்பினர் களையும் சந்தித்தார்.
“உங்கள் மகனையோ உங்கள் கணவரையோ இழப்பது குறித்துக் கற்பனை செய்து பாருங்கள். தங்கள் உறவுகளுக்கு என்ன ஆனது என்பது பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அனுபவிக்கின்ற வேதனை அப்போது உங்களுக்குப் புரியும். பொறுப்புள்ள ஓர் அரசுக்கு பாதிக்கப்பட்டோரது காயங் களை ஆற்றவேண்டிய கடமை இருக்கி றது”
உறவினர்களுடனான சந்திப்பின் பின்னர் இவ்வாறு அமெரிக்கத் தூதர் தனது ருவீற்றர் பதிவில் எழுதியிருக் கிறார்.
குமாரதாஸன். பாரிஸ்.
24-02-2021