பிரான்சில் கடந்த 31.05.2015 அன்று சாவடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களின் 31 ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம்
பாரிஸ் லாக்கூர்நெவ் பகுதியில் இடம்பெற்றது.
நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் சிவராஜா அவர்களின் குடும்பத்தினரால் சுடரேற்றப்பட்டு அவர்களின் திரு உருவப் படத்திற்கான மலர்மாலையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் அணிவித்ததுடன், நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கையின் பிரதியை நாட்டுப்பற்றாளர் சிவராஜா அவர்களின் துணைவியாரிடம் கையளித்தார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர்வணக்கம் செலுத்தினர். நிகழ்வு மண்டபத்தில் நாட்டுப்பற்றாளர் சிவராஜா அவர்கள் தொடர்பான காணொளி விவரம் திரையில் காண்பிக்கப்பட்டது.
மதியபோசனத்தைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் சிவராஜா அவர்கள் நினைவான நினைவு மலர் வெளிட்டுவைக்கப்பட்டது.