வவுனியாவில் தனது மகனை 21 ஆண்டுகள் தேடியலைந்த தாயார் மரணம்!

0
194

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 21 ஆண்டுகளாகத் தேடியலைந்து போராடிவந்த தாயொருவர், மகனுக்கு நடந்ததை அறியாமலே சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா – மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே நேற்று (22) திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் தருமகுலநாதன் 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் 1,465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பிலும் தாய் ஒருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here