வட கிழக்கு நைஜீரியாவிலு ள்ள பொர்னோ மாநிலத்தில் போகோ ஹராம் போராளிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 150 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்தி கள் தெரிவிக்கின்றன.
ராட் ஏரிக்கு அண்மையிலுள்ள குகவா கிராமத்தை ஊடுருவி போராளிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர் கள் உட்பட குறைந்தது 97 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் மொங்குனோ நகருக்கு அண் மையிலுள்ள இரு கிராமங்களில் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய குறைந்தது 48 பேர் போராளிகளால் கொல்லப்ப ட்டுள்ளனர். அந்தக் கிராமங்களில் பெண்களையும் ஆண்களையும் வேறாகப் பிரித்த போராளிகள், ஆண்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மொங்குனோ நகரானது அண்மையில் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
குகவா கிராமத்தில் சுமார் 50 போராளிகள் ஊடுருவி தாக்குதலை நடத்தியதாக கூறப்ப டுகிறது.