இலங்கையில் நீதி பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இல்லை!

0
207

இலங்கையில் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகளின் முன்னாள் ஆணையாளர்கள் மற்றும் சுயாதீன நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் முன்னாள் ஆணையாளர்கள், கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி யுவன் மனுவல் சன்டோஸ், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பிரதி செயலாளர் ஜன் எலியசன் உட்பட 20 முன்னாள் நிபுணர்களும் சுயாதீன நிபுணர்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் நாடு முன்னேற்றத்தை காணவில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

நிலையான நல்லிணக்கம் மற்றும் மீண்டும் மனித உரிமை மீறல்கள், மோதல்கள் இடம்பெறுதலை தடுப்பதற்கான முக்கியமான விடயமாக, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் அநீதிகளிற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கானஉறுதியான சர்வதேச நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.

ஆகவே உறுப்பு நாடுகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட்டு, சர்வதேச நியாயாதிக்கத்தின் ஊடாக நீதிக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மனித உரிமை ஆணையாளர் விடுத்த வேண்டுகோளையே நாங்களும் எதிரொலிக்கின்றோம்.

இலங்கை தண்டனையின் பிடியிலிருந்து, விலக்களிப்பதை நிறுத்த மறுப்பதால் சர்வதேச வழிமுறைகள் ஊடாக பொறுப்புக்கூறலிற்கான வழிவகைள் குறித்து ஆராயவேண்டும்.

இதேவேளை சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிக்கவேண்டும் என்ற மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நாங்கள் ஆதரிக்கின்றோம்” என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here