பிரெஞ்சு மக்களது சேமிப்பு கடந்த ஆண்டில் மிக உச்சம்: வைரஸ் காலத்தின் நற்பலன்!

0
169

பிரெஞ்சு மக்களின் நிதி சேமிப்புப் பழக்கம் கடந்த ஆண்டு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இதனை வைரஸ் காலத்தின் மிக முக்கிய நல்ல செய்தி என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

எதிர்காலம் பற்றிய அச்சம், பொது முடக்கங்களால் தேவையற்ற செலவுகள், கொள்முதல்கள் குறைந்தமை, விசேட அரச உதவிக் கொடுப்பனவுகள் இவை போன்ற பல காரணங்களினாலேயே பொது மக்களது சேமிப்பு உயர்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

தேசிய அளவில் வங்கிகளின் livret A எனப்படுகின்ற நிலையான சேமிப்புக் கணக்குகளில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 26 பில்லியன் ஈரோக்கள் தொகை சேமிப்பாக வைப்பிடப் பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2019 இல் மொத்த சேமிப்பு பத்து பில்லியனாக மட்டுமே இருந்தது.

கடந்த ஆண்டில் தலா ஒவ்வொரு வைப்பாளர்களும் சராசரியாக 276 ஈரோக்களைச் சேமித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.இதில் குறிப்பாக 18-24 வயதுக்கு இடைப்பட்ட இளையவர் களின் சேமிப்புப் பழக்கம் அதிகரித் திருக்கின்றது என்ற முக்கிய தகவலையும் வங்கிகள் வெளியிட் டுள்ளன.

கலாசார, பொழுது போக்கு நிகழ்வுகள் சினிமா, உணவகங்கள், அருந்தகங்கள் போன்றன முடங்கியதன் காரணமாகவே இளையோர் மத்தியில் சேமிப்புக்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று காரணம் கூறப்படுகிறது.

(படம் மற்றும் செய்தித் தகவல்:BFM தொலைக்காட்சி)

குமாரதாஸன். பாரிஸ்.
16-02-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here