மஹிந்தவை மாத்திரம் நம்பினால் தேர்தலில் வெற்றிபெற முடியாது!

0
182

maithri mahin 2ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்ன­ணியை பலப்­ப­டுத்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆத­ரவு அவ­சி­ய­மா­னதே. ஆனால் மஹிந்­தவை மாத்­திரம் நம்பி கள­மி­றங்­கினால் தேர்­தலில் வெற்­றி­பெறமுடி­யாது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் துணை அதற்கு அவ­சியம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு மிகவும் அவ­சி­ய­மான நபர்­க­ளே­யாவர். ஆனால் அவர்­களை மட்டும் நம்பி களம் இறங்­கினால் கட்­சியை வெற்றிப் பாதையில் கொண்­டு­செல்ல முடி­யாது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் துணை இல்­லாது கட்­சியை மீட்­டெ­டுப்­பது கடி­ன­மான விட­ய­மாகும். அதேபோல் அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­னதும் ஆத­ரவை பெற்ற ஒரு நப­ரையே பிர­தமர் வேட்­பா­ள­ராக்க வேண்டும். யாரு­டைய தனிப்­பட்ட விருப்­பத்­தையும் கவ­னத்தில் கொண்டால் கட்சி சிதை­வ­டையும் நிலைமை ஏற்­பட்­டு­விடும். இன்று கட்­சிக்கு வெளியில் பலர் தமது தனிப்­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். வெளி இடங்­களில் தனி­யாக செய்­தி­யாளர் சந்­திப்­பு­களை நடத்தி கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். ஆனால் இவை எதுவும் கட்­சியின் சொந்தக் கருத்­தா­காது.

கட்­சிக்கு என்று மத்­திய குழு உள்­ளது. கட்­சியின் மத்­திய குழுவில் ஒரு விடயம் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டு இறு­தி­யாக பொது­வான முடிவு எடுக்­கப்­படும். அதையே அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் எனக் குறிப்­பிட்டார்.

மஹிந்த அம­ர­வீர..

இந்தச் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர கருத்து தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியானது பல­மா­னதும் யாராலும் பிள­வு­ப­டுத்த முடி­யா­த­து­மான கட்­சி­யாகும். ஒவ்­வொரு கட்­சியும் தேர்­தலில் தோற்­ற­வுடன் பிள­வு­பட்ட வர­லாற்றை நாம் கண்­டுள்ளோம். ஐக்­கிய தேசியக் கட்சி கடந்த காலங்­களில் எட்டு தட­வைகள் பிள­வு­பட்­டுள்­ளது.

மக்கள் விடுதலை முன்­னணி இரண்டு தட­வைகள் பிள­வு­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் , தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சிகள் கூட பிள­வு­களை எதிர்­கொண்­டுள்­ளன. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் அவ்­வா­றான பிள­வுகள் இது­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை. இம்­முறை நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பிரச்­சா­ரத்­துக்கு எதி­ரா­கவே செயற்­பட்டோம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் வெற்­றியை பலப்­ப­டுத்தும் நோக்­கத்தில் நாம் கள­மி­றங்­கினோம். ஆனால் நாம் தோல்­வியை எதிர்­கொண்டும் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கீழ் மீண்டும் கட்­சியை ஒன்­றி­ணைத்து பல­மான கட்­சி­யாக கூட்டு சேர்ந்­துள்ளோம். கட்­சியின் தலைமைப் பொறுப்­பினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­றுக்­கொண்­டுள்ளார். ஆகவே தொடர்ந்து இந்தக் கட்­சியை பல­மான கட்­சி­யாக இட்டுச் செல்­வதே எமது நோக்­க­மாகும்.

மேலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை இரண்டு தட­வைகள் நாம் ஜனா­தி­ப­தி­யாக்­கி­யுள்ளோம். அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவை இரண்டு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாக்­கி­யுள்ளோம்.

அப்­போ­தெல்லாம் கட்­சியின் ஒன்­றுமை மற்றும் நாட்டின் நன்­மையை மட்­டுமே கவ­னத்தில் கொண்டு தீர்­மானம் எடுத்தோம். ஆனால் இம்­முறை மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எமது ஆத­ரவு இருக்­க­வில்லை. அவ­ருக்கு எதி­ரா­கவே நாம் செயற்­பட்டோம். ஆனால் அவர் இன்று கட்­சியை ஒன்­றி­ணைத்து மீண்டும் ஒன்­றாக முன்­செல்ல தயா­ராக உள்ளார். ஆகவே அதை நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

தேர்­தலின் பின்னர் நாம் ஜனா­தி­ப­தி­யுடன் கைகோர்த்து செயற்­பட ஆரம்­பித்து விட்டோம். இதில் முன்­னைய தலை­வர்­களை இரு­வ­ரையும் துணைக்கு அழைக்­கின்றோம். இவர்­க­ளது துணை இல்­லாது கட்­சியை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது.

அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மக்­களின் ஆத­ரவை முழு­மை­யாக பெற்­றுள்ளார். அவ­ரது துணை மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். அதை யாரும் நிரா­க­ரிக்க முடி­யாது. எனவே இம்­முறை பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் சார்பில் பல இளம் உறுப்­பி­னர்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வளங்­கப்­ப­ட­வுள்­ள­தாக கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. அதேபோல் மிகவும் பல­மா­ன­தொரு அணி­யினை தயார்­ப­டுத்தி தேர்­தலில் கள­மி­றக்க நாம் தயா­ராக உள்ளோம். இம்­முறை தேர்­தலில் எமக்கு மிகப்­பெ­ரிய வெற்­றியை தக்­க­வைத்­துக்­கொள்ள முடியும்.

ஏனெனில் எம்முடன் பலமான பங்காளிக் கட்சிகள் கைகோர்த்துள்ளன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் அணியில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு , மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி ஆகிய முக்கிய கட்சிகள் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளன. ஆகவே அவர்களது வாக்கு வங்கியில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. எனவே நாம் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பலமான அரசாங்கத்தை அமைப்போம் எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here